இன்றைய இளம்கவிஞர்களை முறையாகத் தமிழ் பயின்று வந்தவர்கள் எனச் சொல்லிவிட முடியாது. ஒருவகையில் இளம் கவிஞன் தான்தோன்றி. இலக்கிய உலகம் அவனுக்கு எதேச்சையாகவே அறிமுகமாகிறது. திட்டமிடாத ஒரு பயணத்தில்தான் இவ்வுலகுக்குள் அவன் பிரவேசிக்கிறான். எதிர்பாராமல் தட்டுப்படும் ஒரு கவிதைக் கனி தன் சுவை நாவால் அவனைச் சுழற்றி உள்ளிழுத்து கொள்கிறது. எந்தக் கவிதை அவனை ஈர்க்கிறதோ அதே கவிதைதான் அவனுக்கு வழிகாட்டியாகவும் மாறுகிறது. கவிதையியலின் அத்தனை நுட்பங்களையும் குருவாக இருந்து அதுவே கற்பிக்கவும் செய்கிறது.
Be the first to rate this book.