சில நேரங்களில் நீங்கள் ஒரு விஷயம் குறித்துப் பெரிதும் கவலை அடைந்திருப்பீர்கள். ஆனால் திடீரென்று, அது எவ்வளவு முக்கியத்துவமற்றது என்ற பிரக்ஞை உங்களுக்கு ஏற்படும். அப்போது உங்களுக்கு ஏற்படுகின்ற ஆசுவாச உணர்வைக் கண்டு நீங்களே வியப்பீர்கள். இக்கணத்தில் உங்களுடைய கண்களுக்கு முன்னால் இருக்கின்ற விஷயங்களில் உங்களுடைய கவனத்தைக் குவிப்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது. அப்படிச் செய்வதன் மூலம், தேவையற்றப் பதற்றத்திலிருந்து உங்களை உங்களால் விடுவித்துக் கொள்ள முடியும்; அதோடு, உங்கள் மனமும் அமைதியடையும். இப்புத்தகத்திலிருந்து நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்: • ஒப்பிடுவதை நீங்கள் நிறுத்தும்போது, உங்களுடைய மாயைகளில் தொண்ணூறு சதவீதம் மாயமாய் மறைந்துவிடுவதை நீங்கள் காண்பீர்கள். • உங்களுடைய உடைமைகளை உதறித் தள்ளுங்கள். அது உங்களுடைய மனத்தையும் உடலையும் லேசாக்கும். • அவசர அவசரமாக எதையும் செய்யாதீர்கள். தினமும் ஒரு முறையாவது சிறிது நேரம் அசையாமல் நின்று கொண்டிருங்கள். • நேர்மறையாக எதிர்வினையாற்றுங்கள். மகிழ்ச்சியாக இருக்கப் போகிறீர்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் போவது நீங்கள்தான். • தேவையற்றவற்றைத் தேடித் திரியாதீர்கள். • போட்டியிலிருந்து தூரச் செல்லுங்கள், எல்லாம் தானாகவே சரியாகும்
ஷுன்மியோ மசுனோ, ஜப்பானிலுள்ள 450 ஆண்டுகள் பழமையான ஜென் புத்தக் கோவிலின் தலைமைத் துறவியாக இருந்து வருகிறார். பல பரிசுகளைப் பெற்றிருக்கும் ஜென் தோட்ட வடிவமைப்பாளரான அவர், உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஜென் தோட்டங்களை உருவாக்கிக் கொடுக்கிறார். ஜப்பானிலுள்ள ஒரு பிரபல ஓவியக் கல்லூரியில் சுற்றுச்சூழல் வடிவமைப்புப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்ற அவர், உலகெங்கும் எண்ணற்றச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். ஹார்வர்டு கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் டிசைன், கார்னெல் பல்கலைக்கழகம், பிரவுன் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களில் அவர் நிகழ்த்தியுள்ள சொற்பொழிவுகள் குறிப்பிடத்தக்கவையாகும்.
Be the first to rate this book.