புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் வில்லியம் சோமர்செட் மாம் எழுதிய தி ரேசர்ஸ் எட்ஜ் நாவல் 1944 ஆம் ஆண்டு வெளியானது. இந்த நாவலில் ஓரு அமெரிக்கப் போர் விமானி வாழ்க்கையின் மெய்ப்பொருளை அறிவதற்கான ஆன்மீகத் தேடலில் இந்தியப் பயணம் மேற்கொள்கிறார்.
இதில் சோமர்செட் மாம் ரமண மகரிஷியை ஒரு கதாபாத்திரமாகச் சித்தரித்துள்ளார்.
1938 ஜனவரியில், சோமர்செட் மாம் திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாஷ்ரமத்திற்கு வருகை தந்து பகவான் ரமண மகரிஷியைச் சந்தித்திருக்கிறார். அந்த அனுபவத்தின் வெளிப்பாடாகவே இந்த நாவலை எழுதியிருக்கிறார்.
இந்த நாவல் இரண்டு முறை திரைப்படமாக வெளிவந்துள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்த நாவலை டாக்டர் சந்திரமௌலி மொழியாக்கம் செய்திருக்கிறார்.
Be the first to rate this book.