சென்னையின் புராதன வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களின் தனித்துவம் சொல்லும் கதைகள்.
வள்ளுவர் கோட்டம் · ஐஸ் ஹவுஸ் · ரிப்பன் மாளிகை கன்னிமாரா நூலகம் · ஆர்மீனியர் தேவாலயம் · மெட்ராஸ் துறைமுகம் · காந்தி மண்டபம் · ஆண்ட்ரூஸ் தேவாலயம் · ராயபுரம் ரயில் நிலையம் கபாலீஸ்வரர் கோவில் · புனித ஜார்ஜ் கோட்டை
இது சென்னையின் வண்ணமயமான வாழ்க்கை வரலாறு. எப்படி ஓர் ஆளுமையின் கதையை அவர் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகளின் வாயிலாக விவரிப்போமோ அதேபோல் சென்னைப் பெருநகரின் வரலாற்றை அதில் நிறைந்திருக்கும் முக்கியமான கட்டுமானங்களைக் கொண்டு இந்நூல் விவரிக்கிறது. நாம் அவ்வப்போது பார்க்கும் ஆனால் கூர்ந்து கவனிக்காமல் இருக்கும் பல கட்டடங்கள் பல அரிய நினைவுகளையும் வரலாற்றுத் தரவுகளையும் சுமந்து நின்றுகொண்டிருக்கின்றன. அந்த நினைவுகளையும் தரவுகளையும் தொகுத்துக்கொண்டு சென்னையின் வரலாற்றைச் சுவையாகப் பதிவு செய்திருக்கிறார் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன். மரபு, வரலாறு, பண்பாடு, திரைப்படம், இசை, அரசியல், கட்டடவியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்நூல் மிகுந்த பயனளிக்கும்.
Be the first to rate this book.