ஒரு அதிரடி சினிமா பார்த்துவிட்டு வெளியே வருகிற அனுபவத்தை கட்டாவில் உணரலாம்.
வாசிப்புக்கு எடுத்த சில விநாடிகளிலேயே கட்டா காற்றாற்று வெள்ளமென பாய்ந்து செல்கிறது. த்ரில்லர் நாவலுக்குறிய முழு தகுதியையும் தாண்டி மெல்லிய காதலை கட்டாவோடு கலக்கச் செய்திருப்பது வாசகர்கள் ஒவ்வொருவரும் கட்டாவாகவோ, மஹிமாவாகவோ சில நிமிடங்களாவது வாழ்ந்தேயாக வேண்டிய அனுபவத்தை அனுபவிக்காமல் வாசிப்பிலிருந்து வெளியே வரவியலாது.
நாவலின் கதை, கதாபாத்திரங்கள், காதல், நட்பு,கலவி, காமம், துரோகம், சூழ்ச்சி, கொலை, கொள்ளை..இவையனைத்தையும் எழுத்தில் கட்டமைத்திருப்பது ஒரு பெண் எழுத்தாளர் என்பதில் தான் கட்டா தனித்து முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு நாவல் எவ்வாறு ஒரு வாசகனை சென்றடைய வேண்டும் என்பதில் தனிக் கவனம் செலுத்தியிருக்கிறார் சாரா. எழுத்துக்களில் எந்த சமரசமும் இல்லாமல் சுதந்திர தன்மையோடு கதைக்கு தேவையென கருதிய எந்த வார்த்தைகளையும் பூசி முழுகாமல் யாதார்த்தங்கள் பளிச்சிட பயன்படுத்தியிருப்பது நாவலுக்கு உயிர் கொடுக்கிறது.
காதலுக்கு என தனி அளவுகோல் இல்லை என்பதை தகர்த்தெறிந்திருக்கிறது மஹிமாவின் மனம். சமூகத்திற்காக போலியாக பின்பற்றும் நம் நடைமுறைகளை அடித்து நொறுக்கி கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார் சாரா.
ஒரு துவண்டு போன மனநிலையோ, இரண்டு மூன்று மணி நேர பயணமோ, வாசிப்பு பழக்கத்தை துவங்க நினைக்கும் நபரோ, சுவாரஸ்யங்களை விரும்புபவரோ, யாராகினும் கட்டா உங்களோடு வாழ்ந்து செல்வான் என்பதே கட்டாவுடனான என் வாசிப்பு அனுபவம்.
Be the first to rate this book.