தமிழ்நாட்டு உயர்கல்விச் சூழலைக் களமாகக் கொண்ட நாவல். வளாக நாவல் (Campus Novel) என்ற இலக்கிய வகைமையின் புதிய வடிவத்தில் முன்னோடிப் படைப்பு என்று கருதத்தக்கது. புனைவு, அல்புனைவு, அனுபவப் புனைவு, அரசியல், வரலாறு, இலக்கிய ஆளுமைகள், பிரதிகள் தொடர்பான குறிப்புகள் போன்ற கதையாடல் இழைகள் பலவும் ஊடாடும் பிரதியாக இது பின்னப்பட்டுள்ளது. பகுதிகளைக் கொண்டு ஒரு களத்தின் முழுச்சித்திரத்தை உருவாக்கும் உத்தி இது.
சமகாலக் கல்விப் புலத்தின் மீது அடுக்கப்பட்டுள்ள பிரமைகளைத் தகர்க்கும் அதேவேளையில் அதன் மேலான பகுதிகளை இந்நாவல் உவப்புடன் முன்வைக்கிறது. அங்கதம் இந்தப் பிரதியில் பிரதானமாகத் தொழிற்படுகிறது. அந்தத் தொனி விளைவிக்கும் கேலிக்கும் கிண்டலுக்கும் பின்னாலுள்ள வருத்தமும் கோபமும் கவனம் கொள்ளத்தக்கவை.
Be the first to rate this book.