சிறுகதைகளை எப்படி உள்வாங்கிக்கொள்வது என்பதை உணர்த்தும் பயிற்சியாக அ. ராமசாமியின் கட்டுரைகள் உள்ளன.
குகையின் உள்சுவர்களில் தீட்டப்-பட்டிருக்கும் ஓவியங்கள் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சி பார்வை-யாளர்களைப் பார்க்க வைக்கும் பயண வழிகாட்டியைப்-போல, நவீன சிறுகதை களின் உள் அழகுகளை ஒவ்வொன்றாக சுட்டிக் காட்டியபடி செல்கிறார் அ. ராமசாமி.
இந்தக் கட்டுரைகளால் மன ஊக்கம் பெறும் வாசகர்கள் தம் கூர்மையான வாசிப்பு அனுபவங்களை மேலும்மேலும் ஒளி பெற வைத்து, விரிவு கொள்ளவைக்க முடியும். இப்படி உருவாகும் ரசனைக்கருத்துகள் அனைத்தும் ஒன்றாகத் தொகுக்கப்படுவதன் வழியாக நம் விமர்சனப் பார்வையில் வலிமை படியக்கூடும்.
- பாவண்ணன்
Be the first to rate this book.