யார் எல்லாம் எழுத்தாளர் ஆகலாம்? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள். குழப்பமாக இருக்கிறதா. சரி, நானே சொல்கிறேன். யார் வேண்டுமானாலும் ஆகலாம். நான் ஆகலாம், நீங்கள் ஆகலாம், அவர் ஆகலாம், இவர் ஆகலாம், எவரும் ஆகலாம்.
நம்பமுடியவில்லையா? சரி, உங்களை நம்பவைக்க சில உண்மைக் கதைகளை சொல்லட்டுமா. வாருங்கள், உலகின் பிரபலமான 16 சிறார் எழுத்தாளர்கள் எப்படி எழுதத் துவங்கினார்கள் என்று சொல்கிறேன். அதுவும், கதைபோலவே சொல்கிறேன்.
போரில் இருந்து எழுதியவர்கள், வறுமையில் இருந்து எழுதியவர்கள், அன்பை சொல்லித்தர எழுதியவர்கள், கதை சொல்லி எழுதியவர்கள், அம்மாவாக எழுதியவர்கள், அப்பாவாக எழுதியவர்கள், ஆசிரியராக எழுதியவர்கள், சிறையில் இருந்து எழுதியவர்கள், தன்னம்பிக்கைக்காக எழுதியவர்கள், பயத்தைப் போக்க எழுதியவர்கள், சண்டையைத் தடுக்க எழுதியவர்கள் என பல எழுத்தாளர்களின் சுவாரசியமான கதைகள் இதில் இருக்கின்றன. இதைப் படிப்பவர்களுக்கும் எழுதும் ஆர்வம் நிச்சயமாக வரும்…
Be the first to rate this book.