குழந்தைகளின் மன உலகத்தில் பெரியவர்களால் எளிதில் இயல்பாக நுழைந்து விட முடியாது. ஆக்கிரமிப்பாளர்களாகவும் அத்து மீறி அவர்களின் உலகுக்குள் காலெடுத்து வைப்பவர்களாகவுமே நாம் இருந்து வருகிறோம். அவர்கள் நம் மூலம் இவ்வுலகுக்கு வந்தவர்கள் என்கிற அதிகாரத்தைத் தொடர்ந்து துஷ் பிரயோகம் செய்து வருகிறோம். ஆனால் அவர்களின் உலகத்தில் நுழைவதற்கான கடவுச்சீட்டை அல்லது சாவியை இந்நூலில் எடுத்துரைக்கப்படும் ஒவ்வொரு கதையும் நமக்கு வழங்குகிறது. இக்கதைகளை வாசிப்பதன் மூலம் நாமும் குழந்தைகளாகி, வழியில் நாம் தவறவிட்ட நம் பால்ய காலத்து மனநிலையை மீட்டெடுத்துக் கொள்கிறோம். வார்த்தைகளால் அல்லாமல் இதயம் இதயத்தோடு பேசுகிற சொந்த மொழியை நாம் கண்டடைய முடிகிறது. - எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்
Be the first to rate this book.