திரைக்கதை என்பது இலக்கியமாகுமா அல்லது படப்பிடிப்பிற்குத் தேவைப்படுகிற அத்தியாவசியக் கருவியா என்பதைப் பற்றிய விவாதங்கள் எழுந்திருக்கின்றன. எப்படியாயினும் ஒரு எழுத்துப் படைப்பு திரைக்கதையாக உருமாரும்போது அதன் மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் ஒரு திரைக்கதையாசிரியருக்கு முன்பாக உள்ள சவால். இப்படி ஒரு சிறுகதை அல்லது புதினத்திலிருந்து திரைக்கதை மாறிய விதம் பற்றியும் அதைக் கையாண்ட விதமும் எப்படி கையாளப்பட்டிருக்கிறது என்பதையும் குறித்து நாம் அதிகம் உரையாட வேண்டியிருக்கிறது. அதன் ஒரு தொடர்ச்சியே இந்தப் புத்தகம்.
நாவல் என்பது யாவற்றையும் விரித்து சொல்லக் கூடியது. அவற்றிலிருந்து தேவையானவற்றை எடுத்துக்கொள்வதென்பது பெரும் சவாலே. இதற்கு திரைக்கதையாசிரியர்கள் செய்கிற ஒரு வழிமுறை ஒட்டுமொத்த நாவலிலுமிருந்து திரைக்கதை எதை மையப்படுத்தப் போகிறது என்பதைத் தீர்மானிப்பதே. அதற்குத் தொடர்பில்லாததை நீக்கிவிடுவதை ஒரு கலையாகவே திரைக்கதையாசிரியர்கள் செய்திருக்கிறார்கள். இந்தப் படங்களும், நாவல்களும் எனக்குக் கற்றுத் தந்தவை பல. எனக்குப் பயனளித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதில் மனநிறைவு கொண்டிருந்தேன்.
* ஜா.தீபா
Be the first to rate this book.