விமான பயணத்தில் விமானம் ஏறும் போதும் தரையிறங்கும் போதும் ஜன்னல்களின் திரைகளை திறந்து வைக்குமாறு விமான சிப்பந்திகள் கூறுவர். ஆனால் தற்போது ஜம்மு கஷ்மீரின் ஸ்ரீநகருக்கு செல்லும் விமானங்களில் விமானம் தரையிறங்கும் போது ஜன்னல் திரைகளை மூடுமாறு எதிர்மறை அறிவிப்பு கொடுக்கப்படுகிறது. அங்கு செல்லும் பயணிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இது முதலில் சற்று வியப்பை கொடுத்தாலும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள கஷ்மீரின் நிலையை தங்கள் கண்களில் இருந்து மறைப்பதற்கே இந்த ஏற்பாடு என்பதை விரைவாக புரிந்து கொள்கின்றனர்.
இயல்பு நிலைக்கு கஷ்மீர் திரும்புகிறது என்று மோடி அரசாங்கம் கூறினாலும் அங்கு எதுவும் இயல்பாக இல்லை என்பதுதான் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை என்பதை காட்டுகிறது இந்நூல்.
Be the first to rate this book.