காஷ்மீர் இன்று சந்திக்கும் அத்தனை பிரச்னைகளுக்குமான ஆரம்பப் புள்ளி அக்டோபர் 27, 1947. காஷ்மீருக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்கூட அது ஓர் உலுக்கியெடுக்கும் ஆரம்பம்.
அழகு கொஞ்சும் காஷ்மீர் முதல்முறையாகக் கொள்ளையை, குருதியை, படுகொலைகளை, பாலியல் பலாத்காரத்தை ஒருங்கே கண்ட தினம் அது. பாரமுல்லாவில் உள்ள செயிண்ட் ஜோசப் மடாலயத்தையும் மருத்துவமனையையும் பாகிஸ்தான் ஆதரவுடன் பதான் பழங்குடிகள் சூறையாடிய தினம். காஷ்மீர், இந்தியாவுடன் இணைந்ததை மவுண்ட்பேட்டன் அங்கீகரித்த தினம். இந்தியா, காஷ்மீருக்குத் தன் படைகளை அனுப்பிவைத்த தினம்.
சரித்திரத்தைத் திருப்பிப்போட்ட அந்த ஒற்றை தினத்தை அதிர்ச்சியூட்டும் தகவல்களோடும் திகைக்கவைக்கும் தரவுகளோடும் நேரடிச் சாட்சியங்களோடும் நமக்கு அறிமுகம் செய்கிறார் ஆண்ட்ரூ வைட்ஹெட்.
A Mission in Kashmir புத்தகத்தின் அதிகாரபூர்வமான தமிழ் மொழிபெயர்ப்பு இது. காஷ்மீர் பிரச்னையின் ஆணிவேரை, கள ஆய்வின் மூலமும் வாய்மொழி வரலாற்றின் மூலமும் சுவாரஸ்யமான முறையில்?விவரிக்கும் முக்கியமான நூலும்கூட.
Be the first to rate this book.