நம் நாட்டில் உள்ள காரிருளில், காஷ்மீர் ஒளிவழங்கும் விண்மீனாக வேண்டும் என்பதே எனது வேண்டுதல்,” என்றார் காந்தி. 1947 அக்டோபரில், காஷ்மீர் மீது பாகிஸ்தானின் அப்ரிதி இனக்குழுவினர் படையெடுத்து வந்தபின் காஷ்மீர் இந்தியாவோடு இணைந்தது. இந்திய ராணுவம் காஷ்மீரைக் காக்க அனுப்பப்பட்டது. இந்நிலையில் காஷ்மீர் குறித்தும், மக்களின் விருப்பத்தை அறிவது குறித்தும், போர் குறித்தும், அகிம்சை குறித்தும் காந்தி தொடர்ந்து பேசி வந்தார். காந்தியின் நுட்பமான கருத்துகளில் இன்றைய சிக்கல்களுக்கும் தீர்வுகள் நிறைந்துள்ளன.
Be the first to rate this book.