வெளியான முதல் வாரத்தில் பத்தாயிரம் பிரதிகளும், முதல் வருடத்தில் மூன்று லட்சம் பிரதிகளும் புத்தகம் விற்குமா? மதிப்புக்குரிய பதிப்பாளர்களே, ஆச்சரியப்படாதீர்கள். பெரு மூச்சு விடாதீர்கள். உண்மைதான். ‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ அப்படி விற்றிருக்கிறது. இதை எழுதியவர் ஹேரியட் பீச்சர் ஸ்டவ் என்ற அமெரிக்க பெண் எழுத்தாளர். 1811இல் பிறந்து ஆன்மிகச் சூழலில் வளர்ந்தவர். அடிமைத்தனத்திற்கு ஆதரவான “தப்பிக்கும் அடிமைகளுக்கான சட்டம்” இயற்றப்பட்டதில் தாக்கம் பெற்று, அடிமைத்தனத்திற்கு எதிரான இந்த நாவலை எழுதினார். இந்த நாவல் 37 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல். இந்த நாவலின் ஈர்ப்பும், தாக்கமும் என்றென்றும் நிலைத்து நின்று இலக்கிய உலகில் வாழ்ந்து வருகிறது - வாழ்ந்து வரும்.
Be the first to rate this book.