ஒளிச்சேர்க்கை முடிந்து உதிர்ந்துபோன இலையை மரம் நினைவு கூர்வதில்லை. இறந்த பறவை எதற்கும் காட்டுக்குள் இரங்கல் தீர்மானம் ஏதுமில்லை. யானையோ புலியோ சிங்கமோ இறந்தாலும் ஆண்டு நினைவுகள் அனுசரிக்கப்படு வதில்லை. மனிதன் மட்டும்தான் இறந்த பிறகும் நினைக்கப் படுகிறான். அதிலும் எல்லா மனிதர் களும் எல்லாக் காலங்களிலும் நினைக்கப்படுவ தில்லை. ஈமத்தின் ஈரம் காய்வதற்கு முன்பே பல மனிதர்கள் உலர்ந்துபோகிறார்கள். சில மனிதர்கள் மரித்தநாளில் மட்டும்தான் நினைக்கப்படுகிறார்கள்; நிகழ்கால நிம்மதிக்காகவே மரித்த சில மனிதர்கள் மறக்கப்படுகிறார்கள்.
எவனொருவனின் வாழ்வும் வாக்கும், செயலும் பொருளும் மனிதக் கூட்டத்தின் தற்காலத் தருணத் திற்கும் தேவைப்படுகின்றனவோ அதுவரைக்கும் ஒரு மனிதன் நினைக்கப்படுகிறான். கல்லறையில் அவன் உயிரோடிருக்கிறான். பெரியார் இன்னும் உயிரோடிருக்கிறார்; இருப்பார் மற்றும் இருக்க வேண்டும்.
பெரியார் என்ற பெரும்பொருளை எப்படிப் புரிந்து கொள்வது?
Be the first to rate this book.