அவர் தன் வசீகர மொழியால்
பிரசங்கிக்கும்போது
மரி குட்டிகளாய் இருக்கிறார்கள்.
நீரண்டையில் அமர்ந்து
திராட்சை ரசத்தின்
மகத்துவம் குறித்து
அவர் சிலாகிக்கும்போது
குட்டிக்கவிகள்
தேவனா சாத்தானா
கசாப்புக் கடைக்காரனோ
என அஞ்சிப் பின் தொடராமல்
அத்தி மரத்தின் பின்னே
குட்டிக் கவிஞர்கள்
ஒளிந்து கொள்வது
இளமையான
குட்டி கவிதையாக உள்ளது.
இந்தப் பிள்ளைகள்
பூமியின் மீது உற்சாக மிகுதியிலே
நிறைய்ய சிலுவைகள்
செதுக்கிவிட்டார்கள்.
எதில் நான் அறையப்பட்டேன்
என்பதை சிறிது நேரம்
மறந்தே போனேன்.
அதற்குள்
ஏகப்பட்ட சிலுவைகள்
செதுக்கிவிட்டார்கள்.
எந்தச் சிலுவையிலிருந்து
நான் உயிர்த்தெழுவேன்
பிதாவே என் பிதாவே...
Be the first to rate this book.