வெவ்வேறு மனநிலைகளில் இருந்து எழுதிய மாயா கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கையில் ஒரு பறவையைப் போல கடந்த காலத்திற்குள் சென்றமர்ந்து மீள்கிறேன். காதலும், கண்ணீரும், ஏக்கமும், கொண்டாட்டமும், பதற்றமும், நிராகரிப்புகளும் சில்வண்டுகளைப் போல ரீங்காரமிட்டுச் செல்கின்றன. வாழ்வின் நிறங்கள் இப்படித்தான் என்பதை மாயா சொல்லிக் கொண்டே இருக்கிறாள்.
எனது மாயா கவிதைகளை வாசித்துவிட்டு யார் அந்த மாயா என்று கேட்பவர்களுக்கு என் மாயாவை என்னவென்று அடையாளம் சொல்வது? திறந்த மனதுடன் எனது கவிதைகளுக்குள் நீங்கள் பயணிக்கும்போது அவள் உங்கள் கரங்களைப் பற்றிக் கொண்டு உங்களோடு உரையாடத் தொடங்குவாள். அந்தப் பேச்சில், அந்தப் பிரியத்தில் அவளை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்கள். ஏனெனில், அந்த மாயா நீங்களாகவும் இருக்கிறீர்கள்.
- மனுஷி
Be the first to rate this book.