காலம் தன்னை யுகம்தோறும் புதுமையாக்கிக்கொள்ளும் தருணங்களில் ஈசுவர சந்திர வித்யாசாகர் போன்றவர்களைத்தான் தம் கருவியாக்கிக்கொள்கிறது.
கல்வி, சமூகம், மகளிர் மேம்பாடு… ஆகியவற்றை இயக்கச் செயல்பாடுகளாக்கி களப்பணிகளாற்றி, வங்காள மக்களின் மனப்போக்குகளில் புதுமை துளிர்க்கத் தொடக்கமாக இருந்தவர்களுள் முக்கியமானவர் ஈசுவர சந்திர வித்யாசாகர்.
வங்காள உரைநடையை ஒழுங்குபடுத்தி அம்மொழிக்கு எளிமையும் இனிமையுமான கலைச்சிறப்பை அளித்தவர்.
சொந்தப்படைப்புகள், இலக்கியத் தழுவல்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள், பாடப்புத்தகங்கள், தொகுப்பு நூல்கள் என வங்காள இலக்கியத்திற்கு ஈசுவர சந்திர வித்யாசாகர் அளித்த கொடைகள் ஏராளம்.
பள்ளிச்சிறுவர்களுக்காக அவர் எழுதியமைத்த ‘வர்ண பரிசய்’ (1855) என்னும் வங்காள அரிச்சுவடி இன்றளவும் புகழுடையதாக விளங்குகிறது. அதன் இசையொலி கொண்ட பாடல்களில் தம் இளம்பிராய மனம் மயங்கியதாக கவிஞர் ரவீந்திரர் குறிப்பிடுகிறார்.
ஈசுவர சந்திர வித்யாசாகர் பற்றிய இந்த வரலாறு, சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சிரத்தைமிகு உழைப்பால் விளைந்த அரிய நூல்.
1994ம் ஆண்டுக்கான இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நூல்
Be the first to rate this book.