பணியிடப் பிரச்சனைகள் பற்றிய, சமூக, சூழ்நிலைப் பற்றிய ஆழமானப் பார்வை இல்லாது மக்கிப்போகின்ற சமூகத்திலிருந்து வேறுபட்டு, வேர்விட்டுக் கிளம்பும் ஒருத்தியின் கதை.
எஸ்.அர்ஷியா ஆசிரியர்களின் பணி இடமாற்றம் என்ற ஒரு மையக்கருத்தை வைத்து கொண்டு இந்நாவலை எழுதியுள்ளார். பணி நிரவல், பணி மாறுதல் என்பது ஆசிரியர்களின் மனநிலையை எவ்வாறு சிதைவடைய செய்கின்றது, இப்பணி நிரவல் காரணமாக ஆசிரியர்கள் ஊக்கம் இழந்து விடுவதுடன், குடும்ப சிக்கல்களிலும் தள்ளப்படுகின்றனர் என்பதை இராஜ லட்சுமி என்ற ஆசிரியரை கதாநாயகியாக படைத்து, நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றார். பல மைல்கள் கடந்து குடும்பத்தை பிரிந்து ஒத்தையாக வாழும் ஆசிரியர்களின் மன அவஸ்தைகளை மிக எதார்த்தமாக தன் விறுவிறுப்பான நடையில் மிக அழுத்தமாக எஸ்.அர்ஷியா தனது கரும்பலகை நாவலில் பதிவு செய்துள்ளார்.
Be the first to rate this book.