காருகுறிச்சி அருணாசலத்தின் வாசஸ்பதியில் ஒன்றரை நிமிடங்கள் ஆனதும் தார ஸ்தாயி காந்தாரத்தில் ஒரு கூவல்.
சத்தியமாய் கூவலேதான். மனித வாசிப்பில் அந்தக் காந்தார வளைவு சாத்தியமேயில்லை. குயிலாக மாறினால்தான் அந்தக் குழைவும் வளைவும் சாத்தியமாகும். கைபேசியை நிறுத்திவிட்டு மனத்துள் அந்தக் கூவலை மட்டும் மந்திர ஜெபம் போல ஒலிக்க வைத்தபடி நடந்துகொண்டிருந்தேன். திடீரென்று யாரோ தோளைத் தொட்டது போன்ற உணர்வு. திரும்பிப் பார்த்தேன் – நிஜமாகவே யாரோ என்னைத் தொட்டுக் கூப்பிட்டிருக்கிறார். காதிலிருந்து ஹெட்ஃபோன்ஸைக் கழட்டினேன்.
என்னை நிறுத்தியவர் ஏதோ கேட்டார். மனத்தில் ஒன்றும் ஏறவில்லை.
“கியா?” என்று வினவினேன்.
“இதர் வைன் ஷாப் கிதர் ஹை?”
அடப்பாவி! அந்தக் காந்தாரத்தின் போதையில் தள்ளாடியா நடந்தேன்?
Be the first to rate this book.