எத்தகைய தொன்மமும் பண்பாட்டுத் தொடர்ச்சியும் கொண்ட மக்கள், தமது கூட்டு வாழ்வைக் காத்துக்கொள்ள அரசு எனும் அலகில்லாததால் அலைக்கழிக்கப்பட்டார்கள் என்பதை வாழ்வுப் போக்கினூடு விரிக்க முயல்கிறது இந்த நாவல். அவர்களின் வேரையும் விழுதையும் தேடுகிறது.
அன்பு, அரவணைப்பு, காதல், காமம் என்ற மென்உணர்வுகளையும் பகை, வீரம், துரோகம், ஈகம் என்ற வன்உணர்வுகளையும் விசாரணை செய்வதென்பதே எழுத்தில் பெரும் அனுபவம்தான். அத்தகைய ஒரு களமாகத்தான் 'கர்ப்பநிலம்' வாசகர்முன் வைக்கப்படுகிறது.
மனிதப் பெருநாடகத்தின் இன்னோர் பிரதியாகவும் இந்த நாவலைக் காணலாம் என்று நம்புகிறேன்.
5
peter durairaj 25-05-2018 11:49 am