அறிவியல் என்றதும் ஐயோ சாமி என்று நம்மில் பெரும்பாலானோர் ஓடிப்போவதற்குக் காரணம், அதெல்லாம் நமக்குப் புரியாது என்னும் திடமான நம்பிக்கையே. பள்ளிப் பாடங்களில் ஆரம்பித்து இன்றைய தேதி வரை எழுதப்பட்டு வரும் அறிவியல் கட்டுரைகள் நம்மைத் தொடர்ந்து அச்சத்தில் வைத்திருக்கின்றன.
‘கவலையை விடு தலைவா இது நம்ம ஏரியா!’ என்று முதல் முறையாக நம் தோள் மீது கைபோட்டு ஜாலியாக (சத்தியம், சத்தியம்!) விவாதிக்கிறார் சுஜாதா.
அறிவியல் என்பது என்ன என்பதில் தொடங்கி, உயிர்கள் தோன்றிய அதிசயம் (கடவுள் உண்மையில் உலகைப் படைத்தாரா?), கம்ப்யூட்டரின் சாகசங்கள், பயாலஜி, நியூரோ சயின்ஸ், மனத்தால் ஸ்பூனை வளைக்கும் வித்தைகள் என்று வண்ணமயமான ஓர் உலகை கண்முன் விரிக்கிறார் சுஜாதா.
சுஜாதாவையும் அவர் மூலமாக அறிவியலையும் நேசிக்க வைக்கும் புத்தகம் இது.
Be the first to rate this book.