கார்ல் மார்க்ஸின் கடைசி மூன்றாண்டுகளில், அவர் சொந்த வாழ்வில் எதிர்கொண்ட கடும் சோதனைகளையெல்லாம் மீறி, கணிதவியல் ஆராய்ச்சிக்கு முக்கியப் பங்களிப்புச் செய்ததையும், மானுடவியலில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் கிடைத்த முடிவுகளையும், எண்ணற்ற வரலாற்று நூல்களிலிருந்து கற்றவற்றையும் அவர் தமது அரசியல், பொருளியல், கோட்பாடுகளைச் செழுமைப்படுத்தப் பயன்படுத்தியதையும் எடுத்துரைக்கிறார் மார்செல்லோ முஸ்ட்டோ.
மார்க்ஸின் செழுமையான இயக்கவியல் பார்வையை மட்டுமின்றி, அவரது கலை - இலக்கிய இரசனைகளையும், கனிவும் அன்பும் பாசமும் நிறைந்த கணவராக, நண்பராக அவர் வகித்த பாத்திரங்களையும் சிந்தனைக்கு விருந்தாக்கும் இந்த நூல், வியப்பு தரும் பல வரலாற்றுச் செதிகளையும் உள்ளடக்கியுள்ளது.
Be the first to rate this book.