திரைகடல் ஓடியும் கல்வியைத் தேடும் தலைமுறை இது. அதே நேரத்தில் என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்ற கேள்வியும் மேலெழும்பாமல் இல்லை. இங்கே எதுவும் சரியில்லை என்றோ, இங்கே எல்லாமே சரிதான் என்றோ எந்தப் பக்கப் பார்வையையும் வைக்காமல், உயர்கல்வி பற்றி ஆராய முயல்கிறது இந்த நாவல். படித்தால் பணம் வரும், படிப்பதற்குப் பணம் வேண்டும் என்ற விசித்திரச் சுழலில் மாட்டிக்கொண்டிருக்கும் தலைமுறையில் பிறந்த ராஜேஷ், வெளிநாட்டில் உயர்கல்வி படிக்கும்போது பல புதிய விஷயங்களை உணர்கிறான். கல்வியை மேல்நாட்டவரும் நம்மவரும் பார்க்கும் பார்வையில் உள்ள வித்தியாசங்கள் அவனுக்குப் பல திறப்புகளை உண்டாக்குகின்றன. படிக்கும் உங்களுக்கும் உண்டாக்கலாம். உரையாடலின் முதல்புள்ளியாக இந்த நாவல் திகழ்வதே நோக்கம்.
Be the first to rate this book.