பொதுவாழ்வில் ஒரு நீண்ட பயணத்தைக் கடந்துவந்திருக்கும் அ. மார்க்ஸ் தனது வாழ்வின் அழியாத நினைவுகளை இந்த நூலில் காட்சிப்படுத்துகிறார். தான் கடந்து சென்ற, தன்னைக் கடந்து சென்ற மனிதர்களின் வழியே மார்க்ஸ் தனது வாழ்வின் உணர்வுபூர்வமான சித்திரங்களைத் தீட்டுகிறார். இந்த நினைவுக் குறிப்புகள் மார்க்ஸின் தீவிரமான சமூகப் பார்வைகளின் வழியே உருக்கொள்கின்றன. காதலர் தின நினைவுகள், அப்பர் வளர்த்த நாய்கள், சினிமா...சினிமா... கரிச்சான்குஞ்சு, ஜெயகாந்தன்: சில நினைவுகள், அல்லாவின் அருளால் என இந்த நூலில் உள்ள பல கட்டுரைகள் அ. மார்க்ஸின் பரந்து பட்ட பார்வைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துகின்றன.
Be the first to rate this book.