ஒரு நாளில் சந்தோஷமான நேரம் என்பது காலை நேரம்தான்.
வீட்டு வேலை மொத்தமும் முடித்து, மறுபடி முகம் கழுவி, பவுடர் பூசி, மையெழுதி, பீரோவிலிருந்து வாசனையெழப் பிரித்து உடுத்திக்கொள்ளும் நேரம்தான். தன் முகமே தனக்குப் பிடித்துப் போகும். நேரம்தான். இந்த எட்டரை மணி காலைதான் சந்தோஷமான நேரம்.
நிறைய பேர் விடியலைத்தான் நல்ல நேரம் என்கிறார்கள். விடியல் என்பது சற்று அமைதியானது. சந்தோஷம் துக்கம் ஏதுமற்றது. நிதானமானது.
Be the first to rate this book.