வெள்ளி மலையில் தலையால் நடந்து வரும் புனிதவதியைப் பற்றி முன்பே சிவன் அறிந்திருந்ததால் வியப்பு எதுவும் அடையவில்லை. ஆனால், சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும் பார்வதி தேவிக்கு தலையால் நடந்து வரும் அம்மையாரைப் பார்த்ததும் வியப்பு ஏற்பட்டது.
தனக்கு அருகில் இருந்த சிவனைப் பார்த்து, ‘உம்மைக் காண்பதற்காக தலையால் நடந்துவரும் இவர் யார்?’ என்று கேட்டார்.
‘எலும்பு உடம்பைக் கொண்டு தலையினால் நடந்துவரும் இவர் உம்மேல் கொண்டிருக்கும் அன்பை என்னென்று புகழ்வது?’ என்று வியந்தார்.
பார்வதி தேவியார் கூறியதைக் கேட்ட சிவபெருமான் பதில் கூறினான்.
‘இங்கே தலையால் நடந்து வந்துகொண்டிருக்கும் இவர் என் அம்மை ஆவார். இந்த எலும்பு வடிவம் இவரது வடிவம் அல்ல. இத்தகைய வடிவத்தை வழங்குமாறு என்னிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்’ எனத் தெரிவித்தார்.
Be the first to rate this book.