இதில் இருபத்திரண்டு இந்திய நாவல்களைப்பற்றிய கட்டுரைகள் உள்ளன. மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் அதிகமான நாவல்கள் என் கவனத்துக்கு வந்துள்ளன. இந்தி , மராட்டி நாவல்கள் அடுத்தபடியாக. பொதுவாக என் ரசனையை தூண்டியவை என்பதே என் அளவுகோலாக இருந்தது. நூல்வடிவத்துக்குக் கொண்டு வரும்போது பிரதிநித்துவம் குறித்தும் கவனம் கொண்டேன். ‘வனவாசி ‘ குறித்து எழுதியிருந்தாலும்கூட விபூதி பூஷண் பந்த்யோபாத்யாயவின் ‘பதேர் பாஞ்சாலி' பற்றி எழுதியிருந்தமையால் இங்கு தவிர்த்துவிட்டேன். இவ்வரிசையில் வைக்க தகுதியற்ற தெலுங்கு, பஞ்சாபி நாவல்களையும் சேர்த்துக் கொண்டேன்.
- ஜெயமோகன்
Be the first to rate this book.