பெண்ணின் பெரும் துயரம் என்பது சு.தமிழ்ச்செல்வியினுடைய புனைவில் ஒரு வெளி. அவரே இத்துயருக்கான மாற்று வெளியை தமது புனைவின் வழி உருவாக்கிக் கொள்கிறார். இச்சமூகத்தில் இருந்தும் அவரது கற்பனை மற்றும் விழைவுகளிலிருந்தும் உருவாக்கப்படும் இவ்வெளி புதிய இல்லற அறங்களையும் பெண்ணிய நெடிகளையும் உள்ளீடாகக் கொண்டு இயங்குபவை. தமிழ் பண்பாட்டு கட்டுமானத்திற்கு பெரிதும் உதவியவள் சிலப்பதிகார பெருங்கதையாடல் உருவாக்கிய கண்ணகி. இப்பண்பாட்டு உருவாக்கத்தில் அசைவை ஏற்படுத்தும் மாற்று வாசிப்பை சாத்தியப் படுத்துகிறாள் இப்புனைவில் செயல்படும் நவீன கண்ணகி.
Be the first to rate this book.