கன்னடியர் மகள் என்னும் இந்நுாலில், கர்நாடக மாநில வரலாற்றுச் செய்தியையும், விஜய நகர வரலாற்றையும் நன்றாக அறிந்து, அந்த மக்களின் பண்பாடு, கலாசாரம், வீரம், மொழி உணர்வு, படைப்பிலக்கியம் போன்றவற்றை இந்நாவலில் ஆங்காங்கே இடம் பெறச் செய்திருக்கின்றனர்.
கதாபாத்திரத்தில் வருகிற ஒவ்வொரு செய்திகளும் வாசகர்களை மேலும் வாசிக்கத் துாண்டுகின்றன.
இலக்கியங்கள், சிலப்பதிகாரம், தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரபந்தம், கம்ப ராமாயணம், நந்திக்கலம்பகம், முத்தொள்ளாயிரம், திருக்குறள் போன்ற எடுத்துக்காட்டுகளுடன் நாடோடிப் பாடல்களை அமைத்திருப்பது, ஆசிரியரின் இலக்கியத் தேடலைக் காட்டுகிறது. திருநெல்வேலி மாவட்டத்து வட்டார வழக்குச் சொற்களை கையாண்டிருப்பது சிறப்பு.
– முனைவர் க.சங்கர்
Be the first to rate this book.