`இந்து தமிழ் திசை' யின் `ஆனந்த ஜோதி' இணைப்பிதழில் இசைக்கவி ரமணன் எழுதிய `கண்முன் தெரிவதே கடவுள்' தொடராக வந்தபோதே வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் நூல் வடிவம் இது.
கடவுளைக் குறித்த நம்பிக்கை, அவநம்பிக்கை, பார்வைகள், விளக்கங்கள், விவாதங்கள் காலம் காலமாக நம்மிடையே இருப்பவை. இதில் எதையும் விட்டுவிடாமல், எல்லாவற்றையும் குறித்த பார்வையை நமக்கு அளித்து, நம்மிடமிருந்தே ஓர் உள்முக தரிசனத்தை அளிப்பதுதான் இந்தப் புத்தகத்தின் சிறப்பு.
`நம்புவதே வழி என்ற மறைதனை நாமின்று நம்பிவிட்டோம்' என்பது மகாகவி பாரதியாரின் வரிகள். `மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' என்று பாடியிருக்கிறார் கண்ணதாசன். இப்படிப் பலரின் கருத்துகளை மேற்கோள் காட்டி, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தத்துவ விசாரமான 30 கட்டுரைகள் இந்நூலில் உள்ளன.
Be the first to rate this book.