இன்றைக்கு தொழிற்சாலைகளில் இயந்திரங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், கணினிகளின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. அவற்றைக் கையாள்கிறவர்கள் அதிகரித்துவிட்டார்கள். காவல் பணியில் இருப்பவர்கள் தொடங்கிக் கட்டுமானப் பணிவரை எங்கும் கணினி, எதிலும் கணினி என்றாகிவிட்ட நிலையில்.....
கணினிப் பணியில் ஈடுபட்டிருக்கும் பலருக்கும் ஏதாவது ஒரு வகையில் உடற்கோளாறு உருவாகிறது. இதற்குக் கணினிகள் காரணமா , பணியாற்றுகிற சூழ்நிலைகள் காரணமா என்று எவரும் ஆராய்ந்துகொண்டிருப்பதில்லை.
சிலர் எந்தத் தொல்லையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறார்கள். சிலர் என்ன தொல்லை என்பதையே தெரிந்துகொள்ளாமல் வெளியில் சொல்லாமல் மவுனம் காக்கிறார்கள். விவரம் தெரிந்தவர்கள்மட்டும் தங்கள் உடல்நலனில் எந்தச் சிக்கலும் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
கையாள்பவர்கள் முறையாகக் கையாண்டால்தான் உடல்நலம் கெடாமல் இருக்கும்.
ஆகவே, பணியாளர்கள் முதற்கொண்டு பதவியில் இருப்பவர்கள்வரை தெரிந்துகொள்ள வேண்டிய, அவசியம் பின்பற்றவேண்டிய நுட்பங்கள் இங்கு ஏராளமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைப் படித்தால் பலன் உங்களுக்கு மட்டுமல்ல . உலகுக்கே!
Be the first to rate this book.