நாம் சாதாரணமாகக் கடந்து போகின்ற தருணங்களைக் கொஞ்சம் அருகே அமர்ந்து கவனித்து நம்மைச் சலனப்படுத்தும் ஓர் அற்புத கணத்தை சிறுகதைகள் ஏற்படுத்துகின்றன. ஜனநேசனின் ‘கண்களை விற்று’ தொகுப்பில் அப்படியான அனுபவங்களுக்கான சன்னல்களை அவர் திறந்து வைக்க எடுத்திருக்கும் முயற்சிகள் சிறப்பானவை.
அதிகம் பேசப்படாத வாழ்க்கைகள் சிலவற்றை, நிகழ்வுகளை, ஆவேசமான பெண்ணுள்ளத்தை, அதிகார தர்பாரையும் எதிர்க்கத் துணியும் நெஞ்சுரத்தை ஜனநேசன் தனது கருப்பொருளாக எடுத்துக் கொள்வது பாராட்டுக்குரியது. ச.தமிழ்ச்செல்வன் அவர்களது மிக நேர்த்தியான அணிந்துரை அவரது பங்களிப்பை அருமையாகச் சிறப்பிக்கிறது.
Be the first to rate this book.