ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் விதவிதமான அறிவியல் கண்டுபிடிப்புகளின் வரிசை, அசுர வேகத்தில் நம்முன் காட்சி தருகிறது. இயந்திரங்கள், உபகரணங்கள் சார்ந்த வாழ்க்கையை வாழப் பழகிய நமக்கு, இவை இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு நம் வாழ்வோடு ஒன்றியுள்ள இவற்றுக்கெல்லாம் அடிநாதமாக, ஜீவனாக இருப்பது மின்சாரமே! மின்சாரத்தின் கண்டுபிடிப்பே, இன்றைய வளர்ச்சிக்கு அடிப்படை என்னும்போது, இந்த அடிப்படையைக் கண்டுபிடிக்க எத்தனை காலம், எத்தனை எத்தனை மனிதர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து துன்பப்பட்டிருக்கிறார்கள் என்பதை யோசித்தால், கண்டுபிடிப்பின் மகத்துவம் புரியும். காந்தப் புலத்தை வைத்து துவக்கத்தில் ஆராய்ச்சி செய்து, மின்சாரக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து மின்புலத்தை ஆராய்ந்து, மின் காந்தப் புலமாக உருமாற்றம் பெறச் செய்து, அதனை பல்வேறு வழிகளில் பயன்படுத்திக் கொண்ட இந்தக் கண்டுபிடிப்பாளர்களின் மூளைத் திறன் வியக்கத்தக்கது.
Be the first to rate this book.