அறிவியல் முன்னேற்றம் இவ்வளவு தூரம் வளர்ந்துவிட்ட பிறகே மனித நாகரிகத்தில் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகச் சொல்லப்போனால், 18\ம் நூற்றாண்டு தொடங்கி, அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஏற்பட்ட வளர்ச்சியால், இன்றைய நாகரிக வளர்ச்சி கற்பனைக்கு எட்டாத அளவில் உயர்ந்திருக்கிறது. ஏன்? எப்படி? என்ன செய்யமுடியும்? \ என்கிற கேள்விகளே கண்டுபிடிப்புகளுக்கான மூலகாரணம். சமுதாயத்தில் நோய் நொடியால் துவண்டு விழும் மனிதனின் கஷ்டங்களைக் கண்டு சகியாமல், அதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று செயலில் இறங்கிய அறிவியலாளர்கள் தகுந்த மருந்துகளைக் கண்டுபிடித்துத் தந்தார்கள். அறிவியலும் மருந்தியலும் இணைந்து தந்துள்ள கண்டுபிடிப்புகள் எண்ணிலடங்காதவை. இதற்காக அந்தக் கண்டுபிடிப்பாளர்கள் பட்டுள்ள சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல... இந்த நூலில் அப்படி கண்டுபிடிப்பாளர்கள் பட்ட சிரமங்களையும், அவர்கள் ஆய்வில் ஈடுபட்டபோது நிகழ்ந்த அற்புதங்களையும், எப்படி அந்தக் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன என்பது பற்றிய தகவல்களையும் சுவைபடக் கூறியுள்ளார் நூலாசிரியர் கே.என்.ஸ்ரீனிவாஸ்.
Be the first to rate this book.