சிந்து சமவெளி காலகட்டத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு ஆரிய குடியேற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது; இருந்தபோதிலும், கணிசமான இடைவெளி என்பதும், பிற்காலகட்டங்களில் வந்தது போல, அவ்வப்போது வடமேற்கிலிருந்து இந்தியாவிற்கு மக்களும் பழங்குடியினரும் வந்தனர் என்பதும், இந்தியாவிற்குள் கிரகிக்கப்பட்டனர் என்பதும் சாத்தியமானதே. உள்ளே வந்த ஆரியர்களுக்கும், அநேகமாக சிந்து சமவெளி நாகரிகத்தின் பிரதிநிதிகளாக இருந்த திராவிடர்களுக்கும் இடையே மகத்தான முதலாவது கலாச்சார சேர்க்கையும், கூட்டிணைவும் நிகழ்ந்தது என்று நாம் கூற முடியும். இந்த சேர்க்கை மற்றும் கூட்டிணைவின் மூலம் இந்திய இனங்களும், அடிப்படை இந்தியக் கலாச்சாரமும் வளர்ந்தன. அந்தக் கலாச்சாரத்தில் இரண்டின் தெளிவான அம்சங்களும் அடங்கியிருந்தன.
* ஜவஹர்லால் நேரு
Be the first to rate this book.