கட்டற்றதும் வசீகரமுடையதுமான ஒரு கவிமொழியும், மரபின் சாயலுடன் உள்ளார்ந்த லயமும் கொண்டனவாய் இருக்கும் கண்டராதித்தனது கவிதைகள் சமகாலச் சூழலின் இறுக்கத்தை மீறிய ஒரு தளத்தில் இயங்குகின்றன.
சொல்லுதலில் நெகிழ்வும் செறிவும் கூடிய இக்கவிதைகளினூடான பயணத்தில் புதிரின் கண்ணிகள் நெகிழ்ந்தும் இறுகியும் முடிவற்று நகர்ந்து கொண்டிருக்கின்றன. கவிதைகளின் தடையற்ற நீட்சி சரிவை நோக்கிய ஒரு நதியின் பயணம் போன்றதாகிறது.
நவீன தமிழ்க் கவிதை மேற்கொண்டு நகர வேண்டிய பாதையில் தடம் பதித்திருக்கும் சில தனித்துவமான எத்தனங்களில் கண்டராதித்தன் கவிதைகளும் அடங்கும்.
- அசதா
Be the first to rate this book.