சங்க காலத்திற்குப் பிறகு, பெரும் எண்ணிக்கையிலான பெண் கவிகள் தற்காலத்தில்தான் இருக்கிறார்கள். தன்னை எழுதுவதின் மூலம் சமூகத்தை எழுதுதல் என்ற புதிய போக்கைப் பெண் கவிகள் இப்பொழுது கைக்கொண்டிருக்கிறார்கள். கவிதை எழுதுவது தனிநபர் செயல்பாடாக இல்லாமல் களச் செயல்பாடாகவும் இருக்கிறது.
நவீன அடையாளம் கொண்ட பெண்கவிகளின் கவிதைகள் இத்தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி, இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கக் காலம் வரையான தமிழர் வாழ்வை இவர்களின் கவிதைகள் அடையாளப்படுத்துகின்றன. தனக்கான சுதந்திர வெளியை வளர்த்தெடுக்க எழுதத் தொடங்கிய பெண் கவிஞர்கள், இன்றைக்குத் தங்கள் கவிதைகளின் வழியே பெண் மொழியை அழுத்தமாக நிறுவியுள்ளனர்.
உலகின் திசையெங்கும் பரவியிருக்கும் தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதைகளை ஒரே தொகுப்பாக்கிப் பார்க்கும் முயற்சியில் விளைந்துள்ளது இந்நூல்.
Be the first to rate this book.