நாம் காணும் கனவுகளைப் புரிந்து கொள்வதற்கு அறிவியல்பூர்வமான அடிப்படையைக் கண்டடைந்தவர் உலகப் புகழ்பெற்ற அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட். ‘கனவுகளின் விளக்கம்’ என்ற இவரது பிரசித்தி பெற்ற நூலின் சுருக்கமான வடிவம் இது.ஃப்ராய்ட் ஆய்வின் மூலம் கண்டறிந்து கூறும் விளக்கங்கள் உண்மையில் அதிர்வூட்டுபவை.கனவுகளை இப்படியெல்லாம் பகுத்து அறியமுடியுமா என்கிற வியப்பைத் தரும் பக்கங்களே இந்நூலில் அதிகம். ‘சைக்கோ அனலைசிஸ்’ என்னும் உளப்பகுப்பாய்வு முறையைப் பிரயோகித்து எழுதப்பட்டுள்ள இந்நூலை நாகூர் ரூமி தனது தேர்ந்த எளிய மொழி நடையால் வாசகப்புரிதலுக்கு இலகுவாக்குகிறார்.முற்றுப்புள்ளி என்றும் கடைசி அத்தியாயத்தில் அறிஞர் ஃப்ராய்டின் விளக்கங்களை விமர்சனத் தொனியில் நாகூர் ரூமி எழுதிப்பார்ப்பது சிறப்பு.
Be the first to rate this book.