எழுத்தாளர்களின் வருகை சினிமாவை இன்னும் செம்மைபடுத்தும் என்பார் இயக்குநர் பாலு மகேந்திரா. சினிமாவில் இருந்துகொண்டு அதனை தன்னுடைய ஊடகமாக மாற்றிக்கொள்ள எத்தனித்தவர் ஜெயகாந்தன். ஆனால் சினிமா அவரை மாற்ற முயற்சித்தபோது அதிலிருந்து வெளியேறினார். இவர்கள் ஒரு வகை என்றால் சினிமாவைப் பற்றி விமர்சிப்பதும், தொடர்ந்து சினிமா பற்றி எழுதுவதும் அதனை செம்மைப்படுத்தும் இன்னொரு வழிமுறை.
சாரு நிவேதிதா இரண்டாவது வழிமுறையைத் தேர்ந்தெடுத்து அதனை செவ்வனே செய்துகொண்டிருக்கிறார். வெங்கட் சாமிநாதனுக்கு அடுத்து தமிழ் சினிமாவை இந்த அளவிற்கு காத்திரமாக விமர்சித்த எழுத்தாளர் அவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். எத்துணை ஆயிரம் பேர் எதிர்த்தாலும், தன்னுடைய சினிமா விமர்சன போக்கில் இருந்து அவர் ஒருபோதும் பின்வாங்கியதில்லை. தமிழில் வெளியான பல முக்கியமான படங்கள் குறித்தும், மற்ற இந்திய படங்கள் குறித்தும் இந்நூலில் விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார் சாரு நிவேதிதா. தமிழ் சினிமாவை விமர்சன ரீதியாக அணுகியிருக்கும் மிக முக்கியமான புத்தகம்.
Be the first to rate this book.