சுதந்திரப் போராட்டக் காலத்தில் இந்தியாவின் சமூக- அரசியல் களங்களில் நிலவிய விழுமியங்கள் சுதந்திரத்திற்குப் பிறகு பெருமளவில் மாறியது குறித்து இந்திய மொழிகளில் பல்வேறு படைப்புகள் வந்திருக்கின்றன. கலைந்துபோன மகோன்னதக் கனவுகள் குறித்த கவலையைத் தன் படைப்புகளில் கையாண்டிருக்கும் இந்திரா பார்த்தசாரதி,சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய யதார்த்தத்தை இந்த நாவலின் மையப் பொருளாக ஆக்கியிருக்கிறார்நகர்ப்புறம் சார்ந்த படித்த,நடுத்தர மக்களின் வாழ்வை அதன் உளவியல் கூறுகளுடன் சித்தரிப்பதில் வல்லவரான இந்திரா பார்த்தசாரதி, ஓர் இளைஞனின் வாழ்வினூடே இந்தியாவின் மாறிவரும் சமூக- அரசியல் சூழலைப் பதிவு செய்கிறார். சரளமான நடையில் சுவையான வாசிப்பனுபவத்தைத் தரக்கூடிய இந்த நாவல் கூர்மையான விமர்சனப் பார்வையை அடியோட்டமாகக் கொண்டது.
Be the first to rate this book.