நாம் சார்ந்திருக்கும் சமூகம் பெண்களை எப்படி வைத்திருக்கிறது என்பதை சல்மாவின் படைப்புக்களை வாசித்துப்பார்த்தால் தெரியும் என்ற அளவிற்கு அவலங்களை அம்பலத்தில் ஏற்றிய எழுத்துக்கள் சல்மாவினுடையவை. தமிழ்நாட்டின் கவிஞர் மற்றும் அரசியல்வாதி சல்மா. பெண் என்ற காரணத்தினால் கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் ஒரு சமூகத்தில் இருந்து வெளிப்பட்டு அடக்குமுறைகளுக்கு எதிராக தனது படைப்புகளின் மூலம் குரலெழுப்பி வருபவர்.
இவரைப்பற்றி ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் திரையிடப்பட்டது. பெண்கள் தங்களின் முன்னேற்றத்துக்காக எடுக்கும் முயற்சிகளில் எத்தனை தடைக்கற்கள்? அத்தனையையும் உடைத்துக் கொண்டு வருபவர் சல்மா. தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்து எழுதி கடும் எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்டவர். மதத்தின் பெயரால் அடக்கப்பட்ட, ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட பெண் சமுதாய விடுதலைக்கான வெளிச்சமாக சல்மா தனது இலக்கியப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவரது வெளியுலக பயண அனுபவத் தொகுப்பே இந்த நூல்.
கட்டுக்கோப்பான ஒரு மதத்தில் பிறந்த ரொக்கையா பீவியாக (இயற்பெயர்) இருந்த சல்மா, உலக பயணம் மேற்கொண்டது எப்படி? அதில் எத்தனை எதிர்ப்புக்கள்? எத்தனை சுவாரசியங்கள்? பக்கத்து ஊருக்குக் கூட தனியாக செல்லமுடியாத சல்மா, வீட்டுக்குத் தெரியாமல் பாஸ்போர்ட் அலுவலகம் சென்று புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தது எப்படி? சல்மாவின் வெளியுலக பயண அனுபவங்கள் வாசிப்பதற்கு மட்டுமல்ல... வாழ்க்கைக்கும் நல்ல அனுபவமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. வாசியுங்கள்... வசப்படுவீர்கள்!
CommonFolks is an online platform to buy books that quenches your reading thirst. Making Tamil Books Online is the ultimate goal of CommonFolks. You can choose from the ocean of choices with multilingual books of various categories and genres from diversified authors and publishers. Apart from shopping, read book reviews, download free books & get updates about book related events.
Be the first to rate this book.