தீவிரமான பாலியல் பிரக்ஞை கொண்ட பெண், ஆண்மை உணர்வு அவமானப்படுத்தப்படுவதன் விளைவாகக் கொலைவெறிகொள்ளும் சிலம்பாட்டக் கலைஞன், வேலைவாய்ப்பின் பொருட்டு அவமானத்தை வலிந்து ஏற்கும் இளம் கணவன், சக்களத்திகளாகி மோதிக்கொள்ளும் தாயும் மகளும் என வாழ்வின் அனைத்து விளிம்புகளிலிருந்தும் வெளிப்படுகிறார்கள் கதைமாந்தர்கள். படைப்பாளியின் எழுதுகோல் சிலம்பாட்டக் கலைஞனின் கைச் சிலம்பாக மாறி வாழ்வின் சொற்களை வெளியெங்கும் நிறைக்கிறது. கவித்துவமும் செறிவும் நிரம்பிய சொற்கள் உருவாக்கும் வாழ்க்கைச் சித்திரங்கள் தமிழின் பரந்த புனைவு வெளிப்பரப்பில் பிரத்யேக அடையாளத்துடன் உயிர்பெறுகின்றன.
சிறந்த சிறுகதைக்கான ‘கதா’ விருது பெற்ற சாணக்யாவின் இரண்டாம் தொகுப்பு இது.
Be the first to rate this book.