தளும்பிக்கொண்டே இருக்கும் கல்தொட்டித் தண்ணீர், எப்போதோ ஒரு கணத்தில் அசைவற்று உறைந்து அருகில் நின்றிருக்கும் மரத்தின் உருவத்தை சரியான வடிவத்தில் காட்டிவிடுவதுபோல அலைபாய்ந்தபடி இருக்கும் சிக்கலான வாழ்க்கை ஏதோ ஒரு தருணத்தில் மனிதனின் அசலான முகத்தை மிகவும் துல்லியமாக வெளிப்படுத்திவிடுகிறது. அது மானுடத்தை உணர்த்தும் மகத்தான கணம். சில நேரங்களில் துயரங்கள். சில நேரங்களில் பரவசங்கள். இரண்டுமே சம அளவில் நிறைந்த அத்தகு கணங்களை மையமாகக் கொண்டிருக்கின்றன, பாவண்ணனின் சிறுகதைகள். அவற்றைப் பின்தொடர்ந்து நெருங்கிச் செல்லும் வாசகர்கள் அபூர்வமானதொரு தருணத்தில் துயரங்களில் மறைந்திருக்கும் பரவசங்களையும் பரவசங்களில் பொதிந்திருக்கும் துயரங்களையும் மின்னல் காட்சிகளாக கண்டடைகிறார்கள். அதுவே பாவண்ணனின் சிறுகதைகள் வழங்கும் தரிசனம்.
Be the first to rate this book.