1922-இல் காந்தியின் மீதும் தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. நீதிபதி தன் தீர்ப்பின் போது “திலகர் மீதும் இதே பிரிவில்தான் ஆறு ஆண்டு தண்டனை அளிக்கப்பட்டது; அதேபோல் உங்களுக்கும் ஆறு ஆண்டு தண்டனை” என்றார். உடனே காந்தி, “லோகமான்ய பால கங்காதர திலகர் பெயரோடு என் பெயரையும் சேர்த்து அவருக்கு அளித்த அதே தண்டனையை எனக்கும் தந்தது வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். இதை விட சிறந்த கௌரவம் வேறு எதுவும் இருக்க முடியாது” என்று கூறி நீதிபதியைப் பார்த்துக் கைகூப்பி வணங்கினார். இந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேசும் போதும், எழுதும் போதும் என் கண்கள் பனிக்கின்றன; நா தழுதழுக்கிறது. ஆனால் அந்த மாமனிதர் இன்று நமக்கெல்லாம் வெறும் பெயராகவும், காகங்கள் அமர்ந்து இளைப்பாறி கக்கா போகும் சிலையாகவும் மட்டுமே எஞ்சி விட்டார். எப்பேர்ப்பட்ட அவலம் இது!
Be the first to rate this book.