ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? அவருக்கான இலக்கணம் என்னவென்று வரையறுப்பது கடினம். ஆனால் சமூக தளத்தில், பண்பாட்டு வெளியில் நீண்ட காலமாக இயங்கிக் கொண்டிருப்பவர்களின் செறிவான அனுபவங்களின் வழியே கனவு ஆசிரியரைக் கண்டடைதல் சாத்தியம். இதை மனதிற்கொண்டு ஆசிரியர்களுக்குப் பயன்தரத்தக்க வகையில் இத்தொகுப்பு உருவாகியுள்ளது. அசோகமித்திரன், பிரபஞ்சன், ஞானி, ஆர். பாலகிருஷ்ணன், எஸ். ராமகிருஷ்ணன், தியோடர் பாஸ்கரன், இறையன்பு, ச. மாடசாமி, பொன்னீலன், பிரளயன், இரத்தின நடராஜன், தா.வி. வெங்கடேஸ்வரன், பாமா. கே. துளசிதாசன், ச. தமிழ்ச்செல்வன், இரா. நடராசன், ட்ராட்ஸ்கி மருது, கீரனூர் ஜாகிர்ராஜா, பவா செல்லதுரை என 19 ஆளுமைகள் தங்கள் கனவு ஆசிரியர்கள் குறித்து இத்தொகுப்பில் பகிர்ந்து கொள்கின்றனர். கல்விச் சூழலில் இத்தொகுப்பு ஒரு முழு முதல் முயற்சி.
Be the first to rate this book.