கணவன் மனைவி களிப்புடன் இருப்பது எப்படி?' என்கிற புத்தகம் திருமணம் ஆனவர்களுக்கும் திருமணம் ஆகப் போகிறவர்களுக்கும் பயன்படுகின்ற விதத்தில் எழுதப்பட்டுள்ளது.
இல்லறம் என்பது கணவனும் மனைவியும் சேர்ந்து கடத்துகின்ற கூட்டுப் பொறுப்பாகும். இதில் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்பட்டால் மட்டுமேதான் குடும்பத்தை மகிழ்ச்சியுடன் நடத்திச் செல்வது சாத்தியமாகும்.
இந்தப் புத்தகத்தில் பல்வேறு தலைப்புகளில் இது சம்பந்தப்பட்ட விஷயங்களை எளிமையாகவும் சுவையாகவும் சொல்ல முயன்று இருக்கிறேன். எல்லாமே நடைமுறைக்குத் தேவையான மேற்கோள்களுடன் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
சிறிய விஷயங்கள் என்று நாம் அலட்சியப்படுத்து கின்ற பலவும் வாழ்க்கைப் பிரச்சினைகளாக உரு வெடுத்துவிடுவதை பல சந்தர்ப்பங்களில் நாம் கவனிக்கத் தவறி விடுகின்றோம். அம்மாதிரியான விஷயங்களை இந்தப் புத்தகம் முழுவதும் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். அவற்றை கவனமாகப் படித்து நடை முறைக்கு கொண்டு வந்தால் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்குகின்ற எத்தனையோ விஷயங்களைத் தவிர்த்து விடலாம்.
Be the first to rate this book.