கே.எஸ்.இராதாகிருஷ்ணன் கரிசல் மண்ணான கோவில் பட்டி அருகிலுள்ள குருஞ்சாக்குளம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர். அரசியலில் தன் தடத்தைப் பதித்து வருகிறார். மறுமலர்ச்சி தி.மு.கவின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவர். மனித உரிமைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, நதிகள் இணைப்பு-தேசியமயமாக்கப்படல், விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்காக பல்வேறு பொதுநல வழக்குகளை உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் தொடர்ந்துள்ளார். Amnesty International இயக்கத்திலும் இணைந்து பணியாற்றி வருகிறார். பல்வேறு அரசியல் போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை சென்றுள்ளார். மத்திய அரசின் இரயிலவே அமைச்சகம், தொழிலாளர் அமைச்சகத்தின் குழந்தை தொழிலாளர் ஆலோசனைக்குழு போன்ற பல்வேறு மத்திய அமைச்சகங்களின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றியவர். திரைப்பட தணிக்கைக் குழு உறுப்பினராக மத்திய அரசால் பலமுறை நியமிக்கப்பட்டுள்ளார். கொச்சி துறைமுகக் கழகத்தின் நடுவராகப் பணியாற்றினார். இந்திய சட்ட மையத்தின் உறுப்பினராகவும், இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவில் இணைச் செயலாளராகவும் பொறுப்பேற்றுப் பணியாற்றுகிறார். ‘உரிமைக் குரல் கொடுப்போம்’, ‘மனித உரிமைச் சட்டங்களும் சில குறிப்புகளும்’, நிமிர வைக்கும் நெல்லை, சேதுக்கால்வாய் ஒரு பார்வை, கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி, தமிழ்நாடு-50, 123 இந்தியாவே ஓடாதே! நில்!!’ போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். தமிழக அரசின் சார்புள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் போன்ற அமைப்புகளுக்கு அரசு வழக்கறிஞராக இருந்துள்ளார். ‘கதை சொல்லி’ இணையாசிரியர். ‘பொதிமை-பொருநை-கரிசல் கட்டளை’ அமைப்பின் நிறுவனர்.
Be the first to rate this book.