ரஷ்ய எழுத்தாளர் கொரலேன்கோ எழுதிய பிரசித்தி பெற்ற குறுநாவல்களில் முக்கியமானது ‘கண் தெரியாத இசைஞன்’. 13 ஆண்டுகளாகச் சிந்தித்து ஒரு வருடத்தில் எழுதி முடித்த இந்தக் கதை பதினைந்து முறை பல்வேறு பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது. வெளிவந்தபோதெல்லாம் கொரலேன்கோ சிறு திருத்தங்கள் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளியைத் தேடும் வேட்கை பார்வையற்றவர்களிடம் இருப்பதை வலியுறுத்துவதே இந்தக் கதை என்று கொரலேன்கோ கூறுகிறார். இது முற்றிலும் கற்பனைக் கதையன்று. தாம் சந்தித்த பார்வையற்ற திறமைசாலிகளை முன்வைத்து இதைப் பட்டை தீட்டியுள்ளார். மனித மகிழ்ச்சியும், அதனை அடையக்கூடிய வழிகளும் இந்தக் கதையில் அலசப்படுகின்றன. கதாநாயகனான கண் தெரியாத இசைஞன், பியோத்தரைச் சுற்றி நடமாடக்கூடிய, நம்பிக்கையளிக்கக்கூடிய அவனது தாய், காதலி, மாமா ஆகியோர் சமூகத்தில் அவனுக்கு வாய்த்த அதிர்ஷ்டங்கள். அன்பைப் பொழியும் ஆற்றலைக்கொண்ட இந்தக் கதை மனித சமுதாயத்தின் உயர்ந்த தன்மையை உணர்த்தக் கூடியது. ரஷ்ய மொழியில் படித்தவர்கள் எப்படி ரசித்து, லயித்து இந்தக் கதையைச் சுவைத்தார்களோ... அந்தச் சுவை சிறிதும் கெடாமல் மொழிபெயர்ப்பாளர் தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். படிக்கும்போது, கதைக் களம், இயற்கை அழகு வர்ணிப்பு, அன்பு, காதல், பிரிவு, சாதனை ஆகியவற்றில் பல்வேறு பரிமாணங்களில் ரஷ்ய இலக்கியம் மிளிர்வதை உணர்வீர்கள். பக்கத்தைப் புரட்டுங்கள். கண் தெரியாத இசைஞன்... உங்கள் அக விழியைத் திறந்து ஊடுருபவன் என்பதை அறிவீர்கள்.
Be the first to rate this book.