இருநூறுக்கும் அதிகமான கதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் மற்றும் கடிதங்கள், நாட்குறிப்புகள் கையேடுகளைக் கொண்ட மாபெரும் இலக்கிய பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ள கொரலேன்கோ, சிறுகதை, வர்ணனைக் கட்டுரை என்ற இலக்கிய வடிவங்களில் தலைசிறந்து விளங்கியவர். 1886 -ம் வருடத்தில் ‘ ருஸ்கியே வேடமோஸ்தி’ என்ற பத்திரிகையில் ‘ கண் தெரியாத இசைஞன்’ வெளியிடப்பட்டது. இந்தக் கதையின் அழகும் நயமான மனோத்துவமும் ‘ முழு வாழ்க்கையை அடைவதற்குப் பாடுபடுகின்ற ‘ மனிதர்கள் மற்றும் அவர்களுடைய முயற்சிகளின்பால் அவர் காட்டிய தீவிரமான அனுதாபமும் எல்லா வாசகர்களையும் கவர்ந்தன. இந்தக் கதை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. மனிதனுடைய அக உலகத்தைக் கலைரீதியில் ஊடுருவிப் பார்க்கும் திறமையும் நயமான கட்டுரையாகவும் நுணுக்கமான முறையில் பாத்திரங்களைப் படைக்கும் ஆற்றலும் கலையழகு மிளிர்கின்ற சொல் வளமும் இருப்பதை இந்த நூலில் பார்க்க முடியும்.
Be the first to rate this book.